யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 12 பீடங்களும் இணைந்து நடத்திய பொன்விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆண்டுகளில் அரைவாசிக் காலப் பகுதியை இங்கு மூண்டிருந்த போரினுள்ளேயே கழித்தது.
மிகவுப் பயமான – மோசமான அந்தச் சூழலை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அப்படிப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவன் என்ற ரீதியில் நான் பெருமை கொள்கின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட உயர்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக இன்று வியாபித்துள்ளது.
50ஆவது ஆண்டைக் கடந்திருக்கும் இப் பல்கலைக்கழகத்தின் 12 பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை கைலாசபதி கலையரங்கில் இன்று திங்கட்கிழமை (06.10.2025) துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் கொண்டாடின.
இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ;ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பது கட்டடங்களும் வகுப்பறைகளும் கொண்ட கல்வி நிலையம் மட்டுமல்ல. அது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது.
ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பல்கலைக்கழகம் சமூக, கலாசாரம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம் என பல துறைகளில் முன்னேற்றத்தின் தூணாக இருந்து வருகிறது.












தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
