சீனா தொடர்பில் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது.
சீனா தொடர்பான அணுகுமுறை
சீனா தொடர்பான நமது அணுகுமுறையை இன்னும் கவனமாக கையாள வேண்டும். இங்கிலாந்தின் 'மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு' சீனா தொடர்ந்து சவால் விடுத்து வருகின்றது.
உலகளாவிய பிரச்சினைகள் முதல் பொருளாதார நிலை மற்றும் காலநிலை மாற்றம் வரையிலான விஷயங்களில் சீனாவின் செல்வாக்கை நாம் புறக்கணிக்க முடியாது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகளும் இதைப் புரிந்து கொள்கின்றன.
எனவே வேகமாக வளர்ந்து வரும் இந்த போட்டியை நாம் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும்.”என கூறியுள்ளார்.