கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற பெண்ணிடம் திருடிய நபர்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான சேவை பாதுகாப்பு திணைக்களத்தின் ஸ்கேனிங் இயந்திரத்தை பரிசோதித்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்வதற்காக வந்த பெண்ணொருவரின் தங்க நெக்லஸ் மற்றும் பென்டன் ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹுனட்டியன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராகும்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட தங்க நகையை அடகுக் கடையில் விற்பனை செய்த பின் உருக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றொரு பெண்ணின் பையில் திருடப்பட்ட பென்டன் மற்றும் மூன்று மோதிரங்கள் அடகு வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri