கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை, விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் அல்லது டுபாயில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கம்
11 கிலோ கிராம் எடையுடைய 24 கரட் தங்கம் நுட்மான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு விமான சேவையொன்றுக்கு சொந்தமான விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை குறித்த முகாமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த முகாமையாளர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏழு கிலோ கிராம் எடையுடைய தங்கத்துடன் விமான நிலையத்தில் வைத்து மூன்று இந்தியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூர் அல்லது டுபாயிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam