இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கம் இந்தியாவில் சிக்கியது! பின்னணியில் வெளியான தகவல் (photos)
இலங்கையில் இருந்து கடத்திச் சென்ற 5 கிலோகிராம் தங்கம் தமிழகம் - மண்டபத்தில் இந்திய அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மன்னார் ஊடாக தமிழகத்துக்குத் தங்கம் கடத்தி வரப்படுகின்றது என இந்திய சுங்க அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மண்டபம் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது தங்கம் மிட்கப்பட்டுள்ளது,
சந்தேகநபர் கைது

அதை இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது யாருக்காகத் தங்கம் கடத்தி வரப்பட்டது என்ற தகவலைக் கூறியுள்ளார்.
அதையடுத்து யாருக்காகத் தங்கம் கடத்தப்பட்டதோ மரைக்கால் பட்டினத்தில் உள்ள அவரின் வீடு முற்றுகையிடப்பட்டது.
பொலிஸார் சோதனை நடவடிக்கை

வீட்டைப் பூட்டிவிட்டு உரிமையாளர் தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸாரால் வீடு உடைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஐ பாட் உள்ளிட்ட
சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam