இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் பறிமுதல் (Photos)
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8
கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துரை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் நேற்று புதன்கிழமை (30.08.2023) ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் போது இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இரு சக்கர வாகனத்தில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam