கடல்வழியாக கடத்தப்பட்ட சட்டவிரோத தங்க கட்டிகளுடன் மூவர் கைது
இலங்கையில் (Sri Lanka) இருந்து சட்டவிரோதமாக சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதியை கடல் வழியாக படகில் கடத்தி சென்ற மூவர் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கடந்த 4ஆம் திகதி மன்னார் (Mannar) வளைகுடா - முயல் தீவுக்கும் மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம் தனுஷ்கோடி (Dhanushkodi) இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையிலிருந்து படகு மூலம் சமீப காலமாக தமிழகத்திற்குள் அதிக அளவு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை
இதையடுத்து இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், இந்திய கடற்படை சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 கிலோ தங்கம்
இதன்போது, வேதாளை அடுத்த சிங்கி வலை குச்சு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள முயல் தீவுக்கும் மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த படகைச் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த நபர்கள் கடலில் ஒரு பொதியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையின் பின் நேற்றைய தினம் 5 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தங்கமானது இந்திய மதிப்பின் அடிப்படையில் சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என இந்திய மத்திய வருவாய் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தங்கம் கடத்தப்பட்டதன் பின்னணி குறித்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        