புலத்சிங்கள பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை: வெளியான காரணம்
களுத்துறை - புலத்சிங்கள - ஹல்வத்துர (Bulathsinhala) பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்சிங்கள, ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதி விபத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்கான காரணம்
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து குழப்பநிலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போது மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு