வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) தரவுகளின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அந்நிய செலாவணி அதிகரிப்பு
அத்துடன், ஆடை உற்பத்தித்துறை மூலம் 803.4 மில்லியன் டொலர், சுற்றுலாத்துறை மூலம் 687.5 மில்லியன் டொலர், தேயிலை உற்பத்தித்துறை மூலம் 229.9 மில்லியன் டொலர், பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதியில் 177.3 மில்லியன் டொலர்களும் அந்நிய செலாவணியாக பெறப்பட்டுள்ளது.
மேலும், இறப்பர் தயாரிப்பு ஏற்றுமதியில் 166.4 மில்லியன் டொலர், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியில் 102 மில்லியன் டொலர் என அந்நிய செலாவணி வருவாய்களும் சிறந்த முறையில் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கித் தரவுகளினூடாக தெரியவருகின்றது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |