கிளிநொச்சியில் சிறுபோகப் பயிர்செய்கை ஆரம்பிக்க முடியாத நிலை
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறு போகச் பயிர்செய்கைக்கான இறுதித்தீர்மானம் பொதுச்சபையில் உரிய முறைப்படி நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பதனால் பயிர் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணை மடுக்குளத்தின் தற்போதைய நீர்மட்டம் 35அடிக்கு மேலாக கானப்படுகின்ற போதும் சிறு போக பயிர் செய்கைக்கான கூட்டத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பயிர்செய்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 03 ம் திகதி கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் திருப்தி இல்லை என தெரிவித்து விவசாயிகள் வெளி நடப்பு செய்ததால் எந்த தீர்மானங்களும் பொதுச் சபையில் நிறைவேற்றப்படாது கூட்டம் குழப்பத்தில் முடிவு பெற்றது.
7000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக் களத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் குழப்பம் விளைவிக்கப்பட்டு குறித்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.
அதேபோன்று தொடர்ந்து மார்ச் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டமும் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாது குழப்பத்தில் முடிவடைந்தது.
இதனால் இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை நம்பி வாழும் 7000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே பொதுச் சபையில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானத்தை அரசியல் செல்வாக்குடன் ஒரு சிலர் தன்னிச்சையாக நிறைவேற்றுவதற்கு முயற்சித்து வருகின்ற அமையும் முயற்சித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |