தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2,912.92 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு செட்டியார்தெரு விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 232,000 ரூபாவாக உள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 214,600 ரூபாவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் (14) 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 233,000 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 215,00 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (18) சிறியளவு குறைவை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட சூர்யா, ஜோதிகாவின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே.. லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி... உக்ரைன் நாடே மிஞ்சாது: கோபத்தின் உச்சத்தில் டொனால்டு ட்ரம்ப் News Lankasri
