தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்: விலை நிலவரம் வரலாற்றில் புதிய உச்சத்தை தொடுமா..!
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.
அந்த வகையில் முன்னதாக 5ஆயிரம் அமெரிக்க டொலரை தாண்டியிருந்த ஒரு அவுண்ஸ் தங்கத்தின் பெறுமதி 4750 டொலர்கள் என்ற மட்டத்தை அடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏறு முகத்தை கண்டு வருகிறது.
உலக சந்தை நிலவரம்
இந்த நிலையில் இன்றைய தினத்தின் அடிப்படையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்க்கும் போது சுமார் 5050 முதல் 5070 அமெரிக்க டொலர்கள் என்ற நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் வர்த்தக அவதானிகள் கூறுகையில், இவ்வருடத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது 6000 அமெரிக்க டொலர்களை தொடும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் இலங்கையிலும் தங்தக்தின் விலையானது ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 395000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 365400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ற போதும் இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படாது ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri