இலங்கையில் மீண்டும் உயர்கிறது தங்கத்தின் விலை
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,910 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு காத்திருந்த பாரிய அழிவு! ரணிலால் தவிர்க்கப்பட்ட விபரீதம் |
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் நேற்றையதினம்(16) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,900 ரூபாவாகவும், நேற்று முன்தினம்(15) 169,700 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 164,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தும் காரணி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலீடாக தங்கம்
தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும்.
தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க இலாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மாணவி உட்பட்ட நான்கு மாணவர்கள் கைது |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri
