பல்கலைக்கழக மாணவி உட்பட்ட நான்கு மாணவர்கள் கைது
மாணவா்கள் கைது
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆம் வருட இளங்கலை மாணவர்கள் 4 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் ஒரு குழுவினர் வலுக்கட்டாயமாக மைதானத்திற்குள் நுழைய முயன்றபோது அனுமதிச்சீட்டுக்களை பரிசோதிக்கும் இடத்தில் பதற்றம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, பொலிஸாரை தகாத வார்த்தைகளில் பிரயோகித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பல்லேகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 28 வயதுடைய, அக்குரம்பொட, குருநாகல், கொஸ்லந்த மற்றும் கெக்கிராவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
அவர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri