தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,542 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 164,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தும் காரணி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri