உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத மாற்றம் பதிவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத உயர்வைக் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி 24 கரட் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் (05.03.2024) இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை விபரம்
கடந்த 30 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் 100 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
கடந்த 6 மாத காலப்பகுதியை பார்க்கும் போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 200 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலப்பகுதியை பார்க்கும் போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 315 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
ஆசிய சந்தைகளில் தங்கப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளமையும் தங்க விலை அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு: கல்வி அமைச்சரின் அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
