கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை! நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி ஜுன் மாதம் முதலாம் திகதியான இன்றும் (01.06.2023) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்தே காணப்படுகிறது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 147,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 159,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய நிலவரம்
அத்துடன் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார்தெரு நிலவரத்தின் அடிப்படையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 149,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 161,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில கிழமைகளுக்கு முன் 160,000 ரூபாவிற்கும் அதிகமாகவிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan