தங்கத்தின் பெறுமதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான மாற்றம்! புதிய விலை நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22.06.2026) நண்பகலுக்குப் பின் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று நண்பகலுக்குப் பின்னர் மேலும் 2000 ரூபாயால் விலை அதிகரித்ததன் காரணமாக, தற்போது 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 355,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (22) அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 384,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்
முதலாம் இணைப்பு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22.06.2026) 4177 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வெள்ளியின் விலை
அதேநேரம் வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் வெள்ளி, 65 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam