எகிறும் தங்கத்தின் விலை - இலங்கையில் நான்கு இலட்சத்தை கடந்தது பெறுமதி
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு 4780 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கம் 4695.96 டொலர்களாக பதிவாகியிருந்தது.
அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து 75.4 டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கை நிலவரம்
இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் (02.04.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 7000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.