தங்க நகை வாங்க காத்திருக்கிறீர்களா..! விலை குறித்து முக்கிய அறிவிப்பு
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 964,260 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,020 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 272,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,190 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 249,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 238,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 260,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
