அரசியல்வாதிகளுக்கு குற்றக்குழுக்களுடன் தொடர்பு : சபையில் அம்பலமான புலனாய்வு தகவல்
அரசியல்வாதிகள் பலருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடமாடும் ரோந்துகள்
தற்போது, நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு ரோந்துகள் மற்றும் நடமாடும் ரோந்துகள் நடத்தப்படுகின்றன.
முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள், 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசேட நடவடிக்கைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
