ஒரு வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் பதிவான மிகப் பெரிய உயர்வு! மூன்றே வாரங்களில் 12 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம்

Dollar to Sri Lankan Rupee Gold Price in Sri Lanka Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Today Gold Price
By Benat May 25, 2023 05:03 AM GMT
Report

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மிக வேகமாக உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த இரு மாதங்களாக தொடர் சரிவையும் தளம்பல் நிலையையும் சந்தித்து வருகின்றது. 

இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதியில் கடந்த இரு மாதங்களாக தொடர் உயர்வு பதிவாகி வருவதுடன் ஒரு சில சமயங்களில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.  

ஒரு வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

கிட்டதட்ட கடந்த வருடம்,  பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டொலரின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது, 371 ரூபாவாக அதன் விற்பனை பெறுமதியும், கொள்வனவு பெறுமதி 370 ரூபாவையும் அண்மித்திருந்தது. இந்தநிலை,  இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையில்  நீடித்திருந்தது.  

ஒரு வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் பதிவான மிகப் பெரிய உயர்வு! மூன்றே வாரங்களில் 12 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் | Gold Price Today In Sri Lanka

இந்த மாற்றமானது, இலங்கையில் பல்வேறு துறைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டுவரத் தொடங்கியது. குறிப்பாக பொதுச் சேவை கட்டணங்கள் குறைப்பு, எரிவாயு, எரிபொருள் விலை குறைப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு போன்ற பொதுமக்களுக்கு சாதகமான மாற்றங்களை சிறிதளவில் ஏற்படுத்தியிருந்தது. 

அதேசமயம், பொருளாதார நெருக்கடி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடி வந்த காலப்பகுதியில்  தங்கத்தின் விலையும் கடுமையான உயர்வை அடைந்திருந்தது.   கிட்டத்தட்ட 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின்  விலையானது 2 இலட்சம் ரூபாவை அடைந்திருந்தது.  

எனினும்,  அதன் பின்னரான காலப்பகுதியில் ஏற்ற இறக்கங்களுடன் 1 இலட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலை பதிவாகியிருந்தது. 

இவ்வாறான நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியின் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதி மிக வேகமாக வலுவடைய ஆரம்பித்தது. 

அதன் பின்னரான நாட்களில் தங்கத்தின் விலையும் பாரிய அளவில் சரியத் தொடங்கியது. கிட்டத்தட்ட  22 கரட் தங்கப் பவுன் ஒன்று 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் சரிவை சந்தித்தது. 

இந்த நிலையில், தொடர்ந்து வந்த நாட்களிலும் இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்பட தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வந்தன. 

மேலும்,  எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையக் கூடும் என கொழும்பு செட்டியார்த் தெரு தங்க சந்தை நிலவரம் குறிப்பிடுகின்றது. 

தற்போதைய சூழ்நிலையில்,  இலங்கையில் கோவிட் தொற்று பரவலோடு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய காலப்பகுதியில் மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் காட்டிய ஆர்வம் இப்போது இல்லை எனலாம். 

கிட்டத்தட்ட, திருமணம் போன்ற அத்தியாவசிய மங்கள நிகழ்வுகளுக்கு மாத்திரம் தங்க நகை கொள்வனவு செய்யும் மக்கள் தொகையே தற்போது இலங்கையில் உள்ளது. 

இவ்வாறான சூழலில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் உயருமிடத்து தங்க நகைகளுடைய விலைகளும் மேலும் குறையக் கூடும் என்று சொல்லப்படுகின்றது. 

ஆனால், இது மக்கள் மனங்களில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது தங்க நகை கொள்வனவு செய்வதில் மீண்டும் ஆர்வம் காட்டக் கூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கையின் தங்க நிலவரம்

ஒரு வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் பதிவான மிகப் பெரிய உயர்வு! மூன்றே வாரங்களில் 12 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, கடந்த 3 வாரங்களில் இலங்கையில் 22 கரட் தங்கப் பவுனொன்றின் விலையானது கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளது.   இதற்கு ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுப்பெற்றமையும் காரணமாகும். 

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி நேற்றையதினம்(24.05.2023) தங்க அவுன்ஸின் விலை 602,923 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,270 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 170,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 156,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,620 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,900 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.    


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US