டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றம்
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 150,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டித் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
24 கரட் தங்கத்தின் பவுன் ஒன்றின் விலை நேற்றையதினம்(20.05.2023) 160,000 முதல் 165,000 ரூபா வரை இருந்ததாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
குறையும் தங்கத்தின் விலை
இதேவேளை, கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் கடுமையான உயர்வு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகி வருவதுடன் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் 11 ஆயிரம் ரூபாவிற்கும் மேல் குறைவடைந்துள்ளது.