டொலரின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு! தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 636,551 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்ப தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கப் பவுணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் கடந்த இரு நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருகின்றது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 179,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,250 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri