வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை! ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 605,616 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியில் செல்கின்றது.
மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,600 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைவடைந்த விலை
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
