இலங்கையில் அதிகரித்த தங்க விலையால் ஏற்பட்ட விளைவு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தும் செயற்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்கத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, நாட்டில் கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலை அதிக உயர்வை எட்டியுள்ளது.
அதிகளவானோர் கைது

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் செயற்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் தொடர்பில் இலங்கையர்களும், இந்தியர்களும் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கத்தின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு கடத்தல் அதிகரித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri