தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்! அடமானம் வைக்கப்பட்ட நகைகளினால் சிக்கல்
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதன் எதிரொலியாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
இதன்படி, தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தின் விலை நிலவரம்
இதற்கமைய, உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை$3,537.90 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி, இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 344,990 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 315,985 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
தங்கம் விலை சரிவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அதே வேளையில், வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் நகை கடன் வைத்திருப்பவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தங்கத்தின் விலை சரிந்து இருப்பதால் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நகைகளின் மதிப்பும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக நிலுவைத் தொகைக்கும் தங்கத்தின் மதிப்பிற்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடு செய்ய வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலம்! உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு