மீண்டும் 150000 ரூபா என்ற மட்டத்தை அடைந்த தங்கத்தின் விலை! நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (20.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.
அண்மையில் டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபா என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது.
நேற்றைய தினத்திற்கான நிலவரம்
நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய தினத்திற்கான நிலவரம்
இந்த நிலையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது மேலும் குறைந்து 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாவாக காணப்படுகிறது.
ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இவ்வாறு தொடர்ந்து தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றமையானது நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவலான அமையும் எனவும் பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |