மீண்டும் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை
புதிய இணைப்பு
இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 654,007 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றையதினம் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது.
அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.
மேலும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை
இதேவேளை, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மேலும் உயரக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளதோடு, உள்ளூர் சந்தைகளில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
இலங்கையில் தங்க நிலவரத்தின் படி நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்தோடு, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி இரண்டு இலட்சம் ரூபா வரை சென்றிருந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்து வருகின்றது.
தற்போது 24 கரட் தங்கப் பவுண் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்த விலையில் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
