தொடர்ச்சியாக 9 பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரருக்கு குவியும் பாராட்டு
கொழும்பு - சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் கல்முனையைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ் என்ற வீரர் தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார்.
கல்முனை- சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பாலுராஜ், 2012ஆம் ஆண்டு முதல் (2020-2023) ஆண்டுகள் வரை நடைபெற்ற தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்து வருகிறார்.
அதன்படி, இவ்வருடமும் (2023) கொழும்பு சுகததாசவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.
ஒன்பது பதக்கங்கள்
தொடர்ச்சியான முறையில் 8 வருடங்களாக ஒன்பது பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவீகரித்துள்ளார்.
இதன்மூலம் கராத்தே பிரிவில் கிழக்கு மாகாணத்தின் பெயரை முதலிடத்தில் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |