களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்ட தங்க நகை : யுவதி ஒருவர் கைது
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை(02.08.2026) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றையதினம் (03.08.20226) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிமாவட்டத்திலிருந்து குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
