துமிந்த திசாநாயக்க மீண்டும் சிறைச்சாலைக்கு
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
மீண்டும் சிறைச்சாலைக்கு
மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர் சிகிச்சைக்காக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி, ஒரு சிறப்பு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் மெகசின் சிறைச்சாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் அளவுக்கு அவர் பாரதூரமான நோய்களால் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam