கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய வர்த்தகர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் 2 வர்த்தகர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வர்த்தகர்கள் சட்டவிரோதமான முறையில் நகைகளை இலங்கைக்குள் கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர்கள் இருவரே இவ்வாறு நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடிக்கடி விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று (10.07.2023) அதிகாலை 02.20 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்தியன் எயார்லைன்ஸின் AI-273 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
01 கிலோ 780 கிராம் எடையுள்ள நகைகள் இவர்களது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
