பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்
தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு எதிராக பாதாளக் குழுவொன்று கொலைச் சதித்திட்டம் தீட்டுவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரு அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு, ஞானசாார தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தமது விஹாரைக்கு வருகை தந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் வழங்கியதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள்
தாம் தற்போது கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நீண்டகாலமாக உருவாகியுள்ள உலகளாவிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய வன்முறைகள் குறித்து நான் பல்வேறு வெளிப்படுத்தல்கள் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினர் கடும்போக்கு இஸ்லாமிய தரப்புக்களினால் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் குறித்து தம்மிடம் கூறியதாகவும் அது குறித்த சில முக்கிய தகவல்களையும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் எரவூர் பகுதியில் ஜும்மா தொழுகை நேரத்தில் “ஞானசார தேரரும் காசிம் என்ற இளைஞனும் அவர்களின் பின்னணியில் இருப்பவர்களும் ஷரியா சட்டப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்” என்ற வாசகத்துடன் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தகவல் பகிர்வு
“லிபியா கதாபி” எனும் குழுவொன்று இதே தகவலை வாட்ஸ்அப் ஊடாக இந்த தகவல்களை பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“2013ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏற்படவிருந்த பெரும் அழிவை தாமும் தமது அமைப்பும் இணைந்து தடுத்து நிறுத்த முடிந்தது என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தமக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பலமுறை பாதுகாப்பு கோரியுள்ள போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அமைச்சர் பாதுகாப்பை சுய விருப்பில் திருப்பி அனுப்பியதாகவும், தற்போது நிலவும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் பொருத்தமான பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் ஞானசார தேரர் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam