ஞானசார தேரரின் காவியுடை விவகாரம் : நவம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரணை
நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் அங்கியைக் கழற்ற சிறை அதிகாரிகள் எடுத்த முடிவை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, நவம்பர் 18 அன்று மீண்டும் விசாரிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மனுக்கள் இன்று(22.10.2026) மேன்முறையீட்டு நீதிபதிகள் அமல் ரணராஜா, மகேன் கோபல்லாவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிக்குகள் குழுவினரால் மனுக்கள் தாக்கல்
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை நவம்பர் 18ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

தினியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.