அனோஜனுக்கு மன்னிப்பு - ஞானசார தேரருக்கு சிறையா! நீதிமன்றத்தில் நாமல்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Saudi Arabia Galagoda Aththe Gnanasara Thero
By Shadhu Shanker Oct 07, 2026 12:34 PM GMT
Report

ஞானசார தேரர் தொடர்பான விவகாரத்தில் மகா சங்கத்தினரால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் இரண்டு தடவைகள் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், கோட்டபிட்டியே ராஹுல அனுநாயக்க தேரர் மற்றும் சங்க சபையினரால் முன்வைக்கப்பட்ட செய்தி மற்றும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தினார்.

நீதிமன்றத்தில் நாமல்

ஒரு பௌத்த தேரர் அல்லது பௌத்தர் தனது மதம், நம்பிக்கை மற்றும் தர்மம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை இனவாதமாகக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, மகா சங்கத்தினரை அவமதிப்பதும் விமர்சிப்பதும் நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் நிலையை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.

மேலும், நாட்டின் கலாசாரம் மற்றும் போர்வீரர்கள் தொடர்பிலும் அரசாங்கம் ஒரு விதமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகவும், மறுபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான நினைவேந்தல்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அனோஜனுக்கு மன்னிப்பு - ஞானசார தேரருக்கு சிறையா! நீதிமன்றத்தில் நாமல் | Gnanasara Thero About Namala Rajapaksha Speech

எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான சொற்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் நிலையில், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், பௌத்த மதம் மற்றும் பௌத்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் காரணமாகவே நாட்டில் அனைத்து மதங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மகா சங்கத்தினரை அவமதிப்பது, பௌத்த பிக்குகளை விமர்சிப்பது மற்றும் அவர்களுக்கு எதிராக அரசியல் ஒடுக்குமுறையை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 பௌத்த மதம்

தற்போது ஜனாதிபதி மற்றொரு நாட்டின் தலைவரிடம் மன்னிப்பு கோருகிறார்.

மற்றொரு நாட்டில், அந்த மதத்தின் சட்டங்களுக்கு அமைவாக ஒருவர் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதற்கு ஜனாதிபதி முன்வருகிறார். மன்னிப்பு வழங்கப்படுவது நல்ல விடயமே; நிச்சயமாக அது வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இதே அணுகுமுறையை நமது நாட்டிலும் முன்மாதிரியாகக் காட்ட வேண்டும். மற்றொரு நாட்டுக்குச் சென்று ஒரு விதமாகவும், இங்கு வேறு விதமாகவும் செயற்பட முடியாது.

அனோஜனுக்கு மன்னிப்பு - ஞானசார தேரருக்கு சிறையா! நீதிமன்றத்தில் நாமல் | Gnanasara Thero About Namala Rajapaksha Speech

எனவே, பௌத்தத்திற்காகவும் மகாசங்கத்திற்காகவும் குரல் கொடுப்பவர்களை அடக்கி, அவர்களை சிறையில் அடைத்து அரசியல் நடத்தலாம் என்று அரசாங்கம் நினைத்தால், அது வெற்றியளிக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, பௌத்த மதம் மற்றும் மகா சங்கத்தினருக்காக குரல் கொடுப்பவர்களை ஒடுக்கி சிறையில் அடைப்பதன் மூலம் அரசியல் நடத்த முடியும் என அரசாங்கம் கருதினால், அது வெற்றியடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிஷ் நிறுவனத்துக்கு நாமல் ராஜபக்ச அனுப்பிய கடிதம்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கிரிஷ் நிறுவனத்துக்கு நாமல் ராஜபக்ச அனுப்பிய கடிதம்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

ஞானசார தேரரின் உடை விவகாரம்! வீதியில் இறங்கிய ஆதரவாளர்கள்

ஞானசார தேரரின் உடை விவகாரம்! வீதியில் இறங்கிய ஆதரவாளர்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US