ஜனாதிபதி குறித்து சிறுபான்மையினரிடம் இருந்து வந்த சிந்தனை: அமைச்சர் கூறியுள்ள விடயம்
வகுப்பில் குழப்படி செய்வோரிடமும், கெட்டிக்காரர்களிடமுமே அந்த வகுப்பின் பொறுப்பை ஒரு பாடசாலையின் அதிபரோ அல்லது ஆசிரியரோ ஒப்படைப்பது போன்று, ஞானசாரதேரரை புதிய செயலணிக்கு ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (S.M.Chandrasena) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஜனாதிபதி பௌத்த மதத்துக்கு உரியவர் என்றும், அதனால் ஏனைய மதங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பார் என சிறுபான்மையினர் மத்தியில் இருந்து வந்த தப்பான சிந்தனை தற்போது விலகி வர ஆரம்பித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், “வீட்டுக்கு உறுதி” என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பிரதேசத்தில், 89 பேருக்கு காணி உறுதிப்பத்திரம், கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே காணி அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
வீட்டுக்கு வீடு உறுதி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் முதலாவதாக கிண்ணியா பிரதேசத்தில் வழங்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே நாட்டவர் என்ற அடிப்படையில், தனது தூரநோக்கு சிந்தனையை ஜனாதிபதி ஆரம்பித்திருக்கிறார்.
அரச காணிகளில் குடியிருக்கும் அனைவருக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி என்னிடம் பணிப்புரை விடுத்திருக்கின்றார். அதற்காக சகல நடவடிக்கையையும் நான் எடுத்து வருகின்றேன்.
இத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும். எனினும், கோவிட் தாக்கம் காரணமாக அவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது போனாலும், ஆகக் குறைந்தது 60 உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam