ஞானசார தேரரின் ”ஒரே நாடு-ஒரே சட்டம்” செயலணியிலிருந்து நீக்கப்பட்டாரா கலீல் உல் ரஹ்மான்?
கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினா்களின் முன்னணில் இருந்து தம்மை விலக்கிவிட்டதாக கூறப்படும் செய்தியை கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் கலீல் உல் ரஹ்மான், மறுத்துள்ளாா்.
“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில் அங்கம் வகிப்பதை அடுத்தே, தாம் கொழும்பு மாநகர முஸ்லிம் உறுப்பினா்களின் முன்னணில் இருந்து விலக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த முன்னணியின் உறுப்பினா் நிலையிலும், பொருளாளர் நிலையிலும் தாம் தொடா்ந்தும் நீடிப்பதாக கலீல் உல் ரஹ்மான் எமது செய்திச்சேவையிடம் தொிவித்தாா்.
தாம், முன்னணியில் இருந்து விலக்கப்பட்டதாக செய்தி வெளியாதன் பின்னா், முன்னணியின் தலைவா் உட்பட்ட 16 உறுப்பினா்களை தொடா்புகொண்டபோதும் அதனை அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனா்.
இந்தநிலையில், கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினா்களின் முன்னணியின் கொள்கையின்படி முன்னணியில் இருந்து ஒரு உறுப்பினரை விலக்க முடியாது என்றும் கலில் உல் ரஹ்மான் சுட்டிக்காட்டினாா்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri