தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போகிறோம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
ஒரு வாரத்திற்குள் சுகாதார ஊழியர்களின் சம்பளக் குறைப்பை முழுமையாக நீக்குவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே, , நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியின் போது சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளன.
இந்தநிலையில், சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் உறுதிமொழி

இந்த விடயம் குறித்து, சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியதையடுத்து, ஒரு வாரத்திற்குள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவர் உறுதியளித்துள்ளார்.
எனினும் இந்த உறுதிமொழி நீக்கப்படாவிட்டால் அடுத்த வாரத்தின் பின்னர் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தமது மத்திய குழு தீர்மானித்துள்ளது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam