உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பூஜ்ஜிய உமிழ்வு தினம்
செப்டெம்பர் 21 ஆம் திகதியான இன்று பூஜ்ஜிய உமிழ்வு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
இதன்படி உலகலாவிய ரீதியில் இன்று 24 மணிநேரமும் புகைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்துவது நோக்கமாகும்.
இலங்கையில், வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகை, சுற்றுச்சூழல் மாசுபாட்டின் முதன்மையான காரணமாக கருதப்படுகின்றது. இலங்கை பல சர்வதேச சுற்றுச்சூழல் உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் மாசடைவு
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் பெரும் பொறுப்பு நம் நாட்டிற்குள்ளது. இது, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதிலும் சுற்றுலாத்துறையிலும் இலங்கையைப் பாதிக்கும் முக்கிய காரணியாகவுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் இயங்கும் உமிழ்வு குறித்து நம்பிக்கை நிதியம், இலங்கையில் வாகனங்கள் வெளியிடும் நச்சுக்களை கட்டுப்படுத்தும் முக்கிய பணியை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மில்லியன் வாகனங்கள் உமிழ்வு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் சுமார் 450 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இதன்போது ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படும் 20% வாகனங்கள் முதல் சுற்றில் தோல்வியடைகின்றன. சுற்றுச்சூழலுக்கு நச்சுப் புகையை வெளியேற்றும் வாகனங்களை அடையாளம் காணவும், அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும்.
இந்த உமிழ்வு சோதனைக்கு அரசாங்கம் விதிக்கும் கட்டணம் வரி அல்ல. இது ஒரு சோதனைக் கட்டணம். பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
நமது சொந்த போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி
செய்வதற்காக மற்றொருவரின் சுவாசிக்கும் உரிமையை நாம் மீறக்கூடாது என்பதே இன்றைய நாளின் முக்கிய கருத்தாக உள்ளது.

