இலங்கையில் உணவுப்பாதுகாப்பை அச்சுறுத்தும் உலக உணவுத்திட்டம்
ஆசியாவின் அதிகூடிய பணவீக்க விகிதங்கள் மற்றும் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் உணவுப்பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
அதிக பணவீக்கம், அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள், மின் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றுடன் இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அனுபவித்து வருகின்றது.
உலக உணவுத்திட்டத்தின் (WFP) கூற்றுப்படி, இலங்கையில் 6.2 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
செலவுகளை குறைத்தல்
ஒவ்வொரு நான்கில் ஒரு குடும்பமும் ஒரு நாளைக்கு உணவின் எண்ணிக்கையைக் குறைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
நகர்ப்புற ஏழைகள் மற்றும் பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் மக்களைப் போலவே பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிகவும் கடினமாக சூழ்நிலையை எதிர்கொள்கின்றன.
இலங்கையில் சீரழிந்து வரும் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு நிலைமை மற்றும்
எதிர்வரும் பெரும்போகத்தில் போதிய விளைச்சல் கிடைக்காது என்ற வலுவான
சாத்தியக்கூறுகள் காரணமாக, பல நாடுகள் குறிப்பாக உணவு பாதுகாப்பை
மேம்படுத்துவதற்கு மேலதிக உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான
விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
