இலங்கைக்கு தூதுவராக வருவது மகிழ்ச்சி: புதிய அமெரிக்க தூதுவர் பெருமிதம்
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பொருளாதார தொடர்புகளை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருவதற்காக விமானத்தில் ஏறும் முன்னர், இலங்கைக்கான புதிய தூதுவர் ஜூலி ஜே சேங்க்,(Julie J. Cheng) அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தனி பிலிக்கனை (Antony Blinkon) சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கான புதிய தூதுவர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். “கொழும்பு நோக்கி புறப்படுவதற்காக விமானத்தில் ஏறும் முன்னர், நான் ராஜாங்க செயலாளர் அந்தனி பிலிக்கனை சந்தித்தேன்.
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பதவியேற்க முடிந்ததை உண்மையில் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்.
இலங்கை அரசாங்கம், சிவில் சமூகத்துடன் இணைந்து இரு நாடுகளில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புமிக்கவை மற்றும் தொடர்களை வலுப்படுத்தவும் அவற்றை மேலும் ஆராயவும் எதிர்பார்த்துள்ளேன்” என கூறியுள்ளார்.