டெல்லி சென்றடைந்தார் ஜி.எல்.பீரிஸ்
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று டெல்லி சென்றடைந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்காவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் டெல்லி சென்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் ஜி.எல்.பீரிஸ் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
பெப்ரவரி 7 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும், காலை 11 மணிக்கு வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லாவையும் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுவார் என்று இந்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.