இளைஞர்களின் கையில் தமிழ் தேசியத்தை கையளிக்க வேண்டும் : ஈஸ்வரபாதம் சரவணபவன்

Tamil National People's Front E Saravanapavan Sri Lanka Politician
By Kajinthan Feb 26, 2024 08:16 AM GMT
Report

நான் உட்பட வயதில் மூத்தவர்கள் தேசியத்தின்பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழிவிடுவதோடு இளைஞர்களது கையில் தமிழ் தேசியத்தை கையளிக்கவேண்டும்  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். 

தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் உலக தமிழ் மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நேற்றைய தினம் (25/2/2024) காலை 10 மணியளவில்  கொடிகாமத்திலுள்ள மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கண்டியில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை: ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

கண்டியில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை: ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் தேசிய எழுச்சி நாள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "அருகிச் செல்வதை நினைவூட்டுவதற்கும் அதை தக்க வைப்பதற்கும் சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுகின்றன.தமிழ் தேசிய எழுச்சி நாளும் அந்த வகைக்குள் அடங்கி விடக்கூடாது. 

இளைஞர்களின் கையில் தமிழ் தேசியத்தை கையளிக்க வேண்டும் : ஈஸ்வரபாதம் சரவணபவன் | Give Tamil People Party Young People Saravanabavan

எப்போது அந்த வகைக்குள் அது அடங்கி விடுகின்றதோ அன்றே இந்த பூமியில் தமிழன் என்ற இனம் இல்லாமல் போய்விடும். நீங்கள் எல்லோரும் அஞ்சல் ஓட்டத்தை பார்த்திருப்பீர்கள் ஒருவர் கையில் அஞ்சல் கோலைக் கொண்டு வந்து கொடுப்பார். மற்றையவர் அதைப் பெற்றுக் கொண்டு ஓடுவார் அவர் இன்னொருவரிடம் கொடுப்பார்.இப்படி வெற்றியிலக்கை அடையும் வரையில் ஒருவர் இன்னொருவரிடம் அஞ்சல் கோலை பரிமாறிக்கொண்டே இருப்பார்கள்.

அதைப் போலத்தான் நாமும் சில விடயங்களை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும். அவர்கள் அதைக் கொண்டு ஓடுவார்கள் அஞ்சல் கோலை உரிய வகையில் அடுத்தவரிடம் ஒப்படைக்காவிட்டால் தோல்வியில் முடிந்துவிடும். இன்றைய இளம் சமுதாயத்தை நோக்கி எல்லோரும் குற்றம் சுமத்துகின்றனர். தமிழ் தேசிய பாதையிலிருந்து அவர்கள் விலகிவிட்டார்கள் என கூறுகின்றனர்.

வெளிநாடுகளில் ஆயிரத்தை தாண்டும் இலங்கை இளநீரின் விலை

வெளிநாடுகளில் ஆயிரத்தை தாண்டும் இலங்கை இளநீரின் விலை

இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தல் 

போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள், மதுபாவனைக்கு அடிமையாகிவிட்டார்கள், வாள்வெட்டுகளிலும் குழு மோதல்களிலும் ஈடுபடுகின்றார்கள் என்று இளம் சமுதாயத்துக்கு எதிராக குற்றப்பட்டோலை வாசிக்கின்றனர். சிங்களத் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த தடவை தேர்தலில் யாழ்ப்பாணம் வென்றிருந்தார். அவரது வெற்றிக்குப் பின்னால் பல இளைஞர்கள் இருந்திருக்கின்றார்கள்.

இளைஞர்களின் கையில் தமிழ் தேசியத்தை கையளிக்க வேண்டும் : ஈஸ்வரபாதம் சரவணபவன் | Give Tamil People Party Young People Saravanabavan

தமிழ் தேசியத்தை அந்த இளைஞர்கள் தொலைத்துவிட்டார்களா? வேலை வாய்ப்புக்கும் அபிவிருத்திக்கும் தமிழ் தேசியத்தை அடகு வைத்துவிட்டார்களா? இணக்க அரசியலுக்கு முன்னால் தமிழ்த் தேசியம் மண்டியிட்டுவிட்டதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. 

இங்கே இளைஞர்கள் மீது குற்றம் சுமத்த முன்னர் அவர்களிடம் தமிழ்த் தேசியம் என்கின்ற அஞ்சல் கோலை நாம் கையளித்திருக்கின்றோமா என்ற கேள்வி பிரதானமானது. அடுத்த தலைமுறைக்கு தமிழ் தேசியத்தை ஊட்டி வளர்த்திருக்கின்றோமா? தமிழ்த் தேசியப் பற்றுடன் இருந்த நாம் அந்த வழியில் இளைஞர்களை பயணிக்கத் செய்திருக்கின்றோமா இளைஞர்களால் தான் தமிழ் தேசியம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

சஜித் தரப்பின் ஒத்திவைப்புப் பிரேரணை முன்வைப்பு தொடர்பில் அதிருப்தி

சஜித் தரப்பின் ஒத்திவைப்புப் பிரேரணை முன்வைப்பு தொடர்பில் அதிருப்தி

 இளைஞர்களின் கொள்கை

எனவே, அவர்கள் தங்கள் கைகளில் தமிழ் தேசியத்தை எடுத்தால் மாத்திரம் தான் எம்மால் விடிவை நோக்கி நகர முடியும். இலங்கை தமிழரசுக் கட்சி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியீட்டியது. தமிழ் தேசியத்தை நோக்கி இளைஞர்களை திரட்சியாக்கிய ஒன்றாக அதைச் சொல்லலாம் இளைஞர்கள் தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாக வரிந்து கொண்டார்கள்.

இளைஞர்களின் கையில் தமிழ் தேசியத்தை கையளிக்க வேண்டும் : ஈஸ்வரபாதம் சரவணபவன் | Give Tamil People Party Young People Saravanabavan

அதற்காக தமது உயிரைக் கொடுக்கவும் துணிந்தார்கள் இளைஞர்களுக்கு அந்த பாதை காட்டிய எங்கள் தலைவர்கள் பின்னர் தடுமாறிய போதும் இளைஞர்கள் தங்கள் கொள்கைகளில் இருந்து விலகவில்லை அதில் உறுதியாக இருந்தார்கள் தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அன்றைய இளைஞர்களின் பங்குதான் அளப்பரியது.

இப்போதும் அதேதான் நடக்கின்றது.அன்று இளைஞர்களாக இருந்த நாம் தான் இன்று அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். நாங்கள் சரியான முறையில் எங்கள் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றோமா? இப்போதும் வயதில் மூத்தவர்கள் கையில் தான் அரசியல் இருக்கிறது இதில் என்னை விடுத்து நான் சொல்லவில்லை.

ரணிலுக்கு ஆதரவளிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தயாரா..!

ரணிலுக்கு ஆதரவளிக்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் தயாரா..!

தெளிவில்லாத இலக்கு

ஒருவேளை இதனால் தான் என்னவோ தமிழ்த் தேசியம் சிதைவடைகின்றதோ தெரியவில்லை. இளைஞர்களுக்கு தமிழ்த் தேசிய இரத்தம் பாய்ச்சி அவர்களை புத்துணர்வு ஊட்ட வேண்டிய அரசியல் முதியவர்கள் இணக்க அரசியல் பாதையையும் தெளிவில்லாத இலக்கையும் வைத்திருப்பதால் தான் இன்றைய இளைஞர்கள் தமிழ் தேசியப் பாதையில் பயணிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

இளைஞர்களின் கையில் தமிழ் தேசியத்தை கையளிக்க வேண்டும் : ஈஸ்வரபாதம் சரவணபவன் | Give Tamil People Party Young People Saravanabavan

எங்கள் வயதில் மூத்த தலைவர்கள் தேசியத்தின்பால் மிக நாட்டமுள்ள இளைஞர்களுக்கு வழி விடுவதுதான் நல்லது அவர்களின் கைகளுக்கு தமிழ்த் தேசியம் செல்லும் ஆக இருந்தால் மீண்டும் புத்தூக்கத்துடன் அது நகரத் தொடங்கும்.

1980ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் என்ன நடந்ததோ அதேபோன்று இளைஞர்களின் கைகளில் எல்லாவற்றையும் ஒப்படைத்து நாம் ஒதுங்கிக் கொண்டால் தமிழ்த் தேசியம் எழுச்சியடையும்.

இந்தியாவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்! வைரலாகும் காணொளி

இந்தியாவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்! வைரலாகும் காணொளி

தமிழ் தேசிய எழுச்சி 

நான் ஊடக நிறுவனத்தின் நிறுவுனர். எனது நிறுவனமும் தமிழ்த் தேசியத்தையே இலட்சியமாக வரிந்து கொண்டு இன்றுவரை அதன் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு அது பயணிப்பதற்குக் காரணம் நான் பத்திரிக்கையின் செல்நெறியில் தலையிடாமல் இருப்பதுதான். அதற்காக நான் தமிழ்த் தேசியத்துக்கு விரோதமானவன் என அர்த்தமல்ல. 

இளைஞர்களின் கையில் தமிழ் தேசியத்தை கையளிக்க வேண்டும் : ஈஸ்வரபாதம் சரவணபவன் | Give Tamil People Party Young People Saravanabavan

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசிய எழுச்சி நாள் என்பது ஒரு நாளில் முடிந்துவிடும் விடயமாகி விடக்கூடாது. இது இளைஞர்களிடையே விடுதலைப் பொறியை தமிழ்த் தேசிய எழுச்சியை விதைக்க வேண்டும்.இளைஞர்களை மீண்டும் தமிழ்த் தேசியப் பாதையில் திரட்சியாக்க வேண்டும்.

அதற்கு முதியவர்கள் வழிவிட வேண்டும். அதன் பின்னர் தமிழ் தேசிய எழுச்சி என்பது தானாகவே உருவாகும்" என வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

இலங்கையில் வரி இலக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US