ஆதிக்குடியின் சாபம் இவ்வுலகை அடியோடு அழிப்பதற்குள் நீதி கொடு! - வா.கெளதமன்
ஆதி குடியின் சாபம் இவ்வுலகை அடியோடு அழிப்பதற்குள் ஈழத்தமிழர்களுக்கு நீதி கொடு என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வா.கெளதமன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் அம்பிகை தொடர்பில் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தன் மண்ணிற்காகவும், தன் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன் உயிரை உயில் எழுதி வைத்துவிட்டு பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டமிருக்கும் அம்பிகைக்கு தலை வணங்குகின்றோம்.
மனித குலத்தையே நிலைகுலைச் செய்யும் இந்தப் போராட்டம் இன்றுவரையில் பிரித்தானியாவின் அதிகார வர்க்கத்திற்குத் தெரியவில்லையா?
பிரித்தானியாவை ஆண்டுவரும் மகாராணி எலிசபெத்தும் ஒருபெண் தானே? அவருக்கு அம்பிகையின் குரல் கேட்கவில்லையா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.