நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்: பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில், சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், நாட்டில் நேற்றைய தினம் (28.06.2023) காலை வரையான 24 மணிநேரத்தில் 07 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 17 ,18 வயதுடைய சிறுவயதினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பொலிஸ் தலைமையகம்
இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள 07 சம்பவங்களில் 04 சம்பவங்கள் பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று சம்பவங்களும் காதல் தொடர்புகளினால் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 14, 15, 16 மற்றும் 17 வயது நிரம்பிய சிறுமியரே இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பூஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியாகொட, யட்டவத்த ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |