யாழில் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுமி! பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம்
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்குப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அங்குள்ள இனிப்பு வகையைக் களவாடியதாகக் கூறி அதன் உரிமையாளர் அந்த சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல்
இந்த தாக்குதல் காரணமாகக் காயமடைந்த சிறுமி அன்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri

லீக் செய்தவரை யாரும் கேள்வி கேட்கவில்லை, என்னை மட்டும்.. சீரியல் நடிகை ஸ்ருதி நாரயணன் கோபமான பதிவு Cineulagam
