திடீர் சுகயீனமடைந்த சிறுமி : மருந்து உட்கொண்டதால் உயிரிழப்பு
பலபிட்டிய மரதான பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றையதினம் (10.11.2023) இடம்பெற்றுள்ளது.
பலப்பிட்டிய ரேவத கல்லூரியில் கல்வி கற்கும் வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ் என்ற 13 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ப்பட்ட பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam