அலரி மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் சாரணர் இயக்க விருது விழா - பிரதமர் பங்கேற்பு

Colombo Harini Amarasuriya Education
By Rakesh Jul 20, 2026 03:51 AM GMT
Report

"உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தால் நேற்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா'வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை

விருது விழா

சிறுமிகளின் ஒழுக்கம், நேர்மை மற்றும் சமூக அர்ப்பணிப்பைப் பாராட்டி, இம்முறை விருது விழாவில் 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தம் 350 விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பிரதமர் நேரில் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

அலரி மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் சாரணர் இயக்க விருது விழா - பிரதமர் பங்கேற்பு | Girl Scouts Awards Ceremony

"பெண் சாரணர் இயக்கத்தின் முக்கிய வலிமையே பின்னணி எதுவாக இருந்தாலும் சகலருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும். இன்று யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமன்றி, ஒழுக்கநெறி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பிரஜைகளை உருவாக்குவது இன்றியமையாதது. அதற்கு சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.

இலங்கையில் 1917ஆம் ஆண்டு கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சாரணர் இயக்கம், இன்று ஏழு பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றது.

இதில் ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரமாக 'ஜனாதிபதி விருது' கருதப்படுகின்றது. பல்வேறு சவால்கள் மற்றும் பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சாரணர்களுக்கே இந்த உயரிய விருது வழங்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள், விருது பெற்ற சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை

தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US