முல்லைத்தீவில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி
முல்லைத்தீவு (Mullaitinu) முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தவறான நடத்தைக்கு உள்ளான 14 வயதுடைய சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 11ஆம் திகதி (11.06.2024) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில், சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த நான்காம் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான நடத்தைக்கு உள்ளாக்கியமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறுமியின் வீட்டிலே இடம்பெற்றுள்ளது.
இளைஞனை இனம் காட்டிய சிறுமி தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட வேளை குறித்த இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி உளநல சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
